Breaking News

மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டி,காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை!

காஞ்சிபுரம், பிப்.11-

கன்னியாகுமரியில் நடந்த மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 மாணவியர்கள் குழுப் போட்டிகளில் பங்கேற்று 3 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஜா.ஜனனி

கன்னியாகுமரியில் நிகழ் மாதம் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் தமிழகம் முழுவதுமிருந்து விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். 


பி.புவதர்ஷினி


வாள்வீச்சுப் போட்டி தனி நபர் பிரிவாகவும், 3 பேர் சேர்ந்த ஒரு குழுப் போட்டியாகவும் தனித்தனியாக நடைபெற்றன. 

பூஜா

காஞ்சிபுரம் மாநகராட்சி ராணி அண்ணாத்துரை மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர்களான ஜா.ஜனனி, பி.புவதர்ஷினி மற்றும் வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பூஜா ஆகிய 3 பேரும் ஒரே அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி மாநில அளவில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

இம்மூவரில் ஜனனி தனிநபர் பிரிவிலும் தங்கப்பதக்கமும்,மாணவி புவதர்ஷினி வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.

இம்மூவரைத் தவிர காஞ்சிபுரம் நகராட்சி ராணி அண்ணாத்துரை மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர்களான ஜெ.ஆர்த்தி,எல்.பாவனா ஆகிய இருவரும் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். 

வெற்றி பெற்ற இவர்களுக்கு தமிழ்நாடு வாள்வீச்சுப் பிரிவு தொழில் நுட்பப்பிரிவு இயக்குநர் ஜி.ராஜன்பாபு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். 

பதக்கம் வென்ற மாணவியர் தேசிய விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான நிதிஷ்குமாரிடம் பயிற்சி பெற்றவர்கள்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாள்வீச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.


No comments

Thank you for your comments