Breaking News

ஸ்ரீ பத்மபுரம் - ஸ்ரீ தேவி லலிதாம்பிகா பீடத்தின் ஸ்ரீ மாதா ஸ்ரீ பாலானந்தா சுவாமிகள் தலைமையில் 25ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா !!

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் வட்டம் , தூசி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடத்தின் ஸ்ரீ மாதா ஸ்ரீ பாலானந்தா சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற 25ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


இந்த வருஷாபிஷேக விழாவில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடத்தில் கோபூஜை , அஸ்வ பூஜை , ஸ்ரீ விக்னேஸ்வர அக்ஞை, ரக்ஷாபந்தனம் , கலச ஸ்தாபனம், கலச பூஜை, ஸ்வஸ்தி வாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம் , நவகிரக ஹோமம் , நட்சத்திர ஹோமம், சகல சௌபாக்கியம் அருளும் ஸ்ரீ லலிதா ஹோமம் , ஸ்ரீ சக்ர ஆவரண ஹோமம் , லகு பூர்ணாஹூதி ஆகிய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது பக்தர்களுக்கு சுவாமிகளின் ஆசி வழங்கப்பட்டது. 

பின்பு 4.2.2023 அன்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி அளவில் ஸ்ரீ லலிதா த்ரிசதி ஹோமம்,  ஸ்ரீ மேத்தா ஸூக்த ஹோமம் , ஸ்ரீ ஸூக்த ஹோமம் , ஸ்ரீ துர்கா ஸூக்த ஹோமம் , மகா பூர்ணாஹூதி ஆகிய பூஜைகள் ஸ்ரீ மாதா ஸ்ரீ பாலானந்தா சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது.

அதனைத் தொடர்ந்து காலை 12 மணி அளவில் ஸ்ரீதேவி லலிதாம்பிகா அன்னைக்கு  மகா அபிஷேகம் ,கலசாபிஷேகம், அலங்காரம் மற்றும் தூவ தீவ நைவேந்தியம் , மகாதீப ஆராதனை நடைபெற்று வந்திருந்த 100க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு பூஜா பிரசாதம் மற்றும் தேவி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த 25 ஆம் ஆண்டு நடைபெற்ற வருஷாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ மாதா ஸ்ரீ பாலானந்தா சுவாமிகள் மிக சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தேவி லலிதாம்பிகா பீடத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் , சண்முகம் , பெரியார் நகர் ஜனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments