Breaking News

சிக்க்ஷா பப்ளிக் பள்ளியில் 19வது ஆண்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் சிக்க்ஷா பப்ளிக் பள்ளியில் 19வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் கே.மதி  மற்றும் பள்ளி ஜனாதிபதி ஏன்.ரஞ்சித் தலைமையில் மற்றும் பள்ளி முதல்வர் கே.ராஜலக்ஷ்மி முன்னிலையில் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்,  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கிளாசிக்கல் டான்ஸ் , இங்கிலீஷ் ட்ராமா, ஃபோக் டான்ஸ், ஹிந்தி ட்ராமா, யோகா டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்த ஆண்டு விழாவில் சிக்க்ஷா பப்ளிக் பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..

No comments

Thank you for your comments