உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 197 பயனாளிகளுக்கு பணி உத்தரவுகள் வழங்கல்
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 கோடியே 41 லடசம் ரூபாய் மதிப்பில் 197 பயனாளிகளுக்கு பணி உத்தரவுகளை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிரதமந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழக்கும் நிகழ்ச்சி உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்,நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு பணி உத்தரவு ஆவணத்தை வழங்கினர்.
முன்னதாக 95 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு வழங்கும் திட்டமும் 102 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை வழங்கும் திட்டம் என மொத்தம் 2 கோடியே 40 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கான பணி வழங்கும் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞனசேகரன், துணை தலைவர் வசந்தி குமார், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணை தலைவர் இளமதி கோவிந்தராஜன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், ஒன்றிய கவுன்சிலர்கள் ருத்திரகோட்டி, சுகுணா சுந்தரராஜன், துரைவேல், அண்ணாதுரை, வீரம்மாள், நித்யா கோபி,எஸ்.ஆர்.வெங்கடேசன், தயாளன், கல்யாணசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



No comments
Thank you for your comments