மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூர தாக்குதல் - 17வயது சிறுவன் உட்பட மூவர் கைது
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூர தாக்குதல்
காஞ்சிபுரம் தர்கா பகுதியில் 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் 28 வயதுடைய வாலிபரை சராமரியாக கை மற்றும் கால்களால் மதுபோதையில் கொடூரமாக தாக்குதல்
17வயது சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மூவரும் சேர்ந்து வாலிபரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமீத் அவுல்யா தர்கா உள்ளது. இந்த வளாகம் முழுவதும் வக்ப்ஃபோர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தர்காவில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் சிவகாஞ்சி காவல் நிலையம் அமைந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 27 ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் தர்கா அருகே போதையில் ஒரு சிறுவன் உட்பட இரண்டு சகோதரர்கள் மற்றொரு நபர் என மூவரும் சேர்ந்து போதைக்கு அடியானதாக கூறப்படும் கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை சராமரியாக கையாலும் ,காலாலும் கட்டையாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமுற்ற கார்த்திக் மூச்சு பேச்சில்லாமல் மயங்கினார்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த முதல் கட்ட விசாரணையில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பதும் இவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது .
அதே போல் இவரை தாக்கியது தர்கா தெருவை சேர்ந்த யாசர் மற்றும் அவரது 17வயது தம்பி மற்றும் யாசரின் நண்பரான விக்ரம் என்பதும் தெரியவந்தது.
போதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக யாசர்,விக்ரம் மற்றும் யாசரின் தம்பி ஆகிய மூவரும் சேர்ந்து கார்த்திக்-ஐ கடுமையாக தாக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து யாசர் அவனது நண்பர் விக்ரம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.மேலும் 17 வயது சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.



No comments
Thank you for your comments