Breaking News

ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் எம்பி இரா.கிரிராஜன்

நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் இரா.கிரிராஜன்,  ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரிலும் தனியாகவும் நேரம் கேட்டுப்பெற்று அமைச்சரை நேரில் சந்தித்து  அச்சிறுபாக்கம் ரயில்வே நிலையம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.


அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் 1946 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வந்து உரை நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்பதை பதிவு செய்து இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையம் இன்று குடிநீர், நடைமேடை நிழற்குடைகள், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியும் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில்கள் நிற்பதில்லை எனவே பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள், பாதிக்கப்படுவதையும் தங்கள் பயணத்திற்காக மேல்மருவத்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதையும் குறிப்பிட்டு MEMO இரயில் சேவையை நீட்டிக்கவும், குறிப்பிட ரயில்களை நிறுத்தவும், ரயில் நிலையத்தை விரைவில் சீரமைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் வழங்கியுள்ளார்.

அன்பின் நிறை சகோதரர் நம் மக்களின் நலனுக்கான கோரிக்கையை தலைநகர் டெல்லி வரை சென்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் இரா.கிரிராஜன் முன்னெடுப்பு செயலுக்கு  அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும்  தெரிவித்து வருக்கின்றனர்.




No comments

Thank you for your comments