Breaking News

காஞ்சிபுரத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி... மனநிலை சரியில்லாத மகனை விடுதியில் சேர்க்க வேண்டுகோள்

காஞ்சிபுரம், ஜன.30 -

மனநிலை சரியில்லாத மகனை விடுதியில் சேர்க்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவுவாயில் முன்பாக திங்கள்கிழமை மகனுடன் வந்த விதவைப்பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சித்த நிலையில் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் வசித்து வருபவர் லட்சுமி.விதவைப் பெண்ணான இவருக்கு கண்ணதாசன்(23)என்ற மனநிலை சரியில்லாத மகனும் உள்ளார். 

மகனை விடுதியில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் சரியில்லாததை காரணமாக கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். மீண்டும் விடுதியில் சேர்க்க அனுமதிக்கவில்லை. 

இதனால் மனம் வெறுத்துப் போன லட்சுமி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது மகனையும் அழைத்துக் கொண்டு வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக வரும் போது திடீரென தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார் தடுத்து நிறுத்தி லட்சுமியையும், மகன் கண்ணதாசனையும் அழைத்துச் சென்று குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட துணை ஆட்சியர் புண்ணியகோட்டி மகனை மீண்டும் விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

 

No comments

Thank you for your comments