Breaking News

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் V. நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் பேருந்து நிலையம் முன்பு காஞ்சிபுரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர்  அளவூர் V. நாகராஜன் தலைமையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.


ஜனவரி 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்ட கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலத்தை குறிப்பிடாமல் தமிழகம் என குறிப்பிட்டதால் எழுந்த சர்ச்சையால் பல்வேறு எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழக முழுவதும் மாவட்டந்தோறும்  மாநிலத்தை தமிழ்நாடு என உச்சரிக்காமல் ஆளுநர் ஆர். என். ரவி தமிழகம் என உச்சரித்தற்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் V. நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் முன்னிலையில் கண்டன எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் கந்தவேல், குமார், ஊத்துக்காடு ஆ. சிவக்குமார், வாலாஜாபாத் சுரேஷ், மோகன், வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments

Thank you for your comments