தமிழ்நாடு ஆளுநரின் எதிர்மறைபோக்கை கண்டித்து ஆர்பாட்டம்
விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் மேற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு ஆளுநரின் எதிர்மறைபோக்கை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் மேற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம் .ஆர். ஆர் ராதா கிருஷ்ணன்தலைமையில் நகர தலைவர் ரஞ்சித் குமார் முன்னிலையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிதமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா மற்றும் நீட் தேர்வு ரத்து என பல்வேறு தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் காலதாமதம் செய்யும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிர்மறையாக செயல்படும் போக்கை கைவிடக் கோரியும் ஆளுநர் பதவியை விட்டு விலக கோரியும்முழக்கங்களிட்டுஆர்ப்பாட்டம் செய்தனர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments