எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பிய அரசுப்பள்ளி மாணவர்கள்
காஞ்சிபுரம், ஜன.25-
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள கரூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் குடியரசு தினத்தையொட்டி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாழ்த்துக் கடிதங்களை புதன்கிழமை அனுப்பி வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.
நிகழாண்டும் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக 4 வது ஆண்டாக வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து 4 வது ஆண்டாக வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வைத்தமைக்கு பாராட்டும் தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரம் தியாகம் போற்றுவோம் அமைப்பின் நிர்வாகி வளவன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுகுமார் ஆகியோர் புத்தங்களை பரிசாக வழங்கினார்கள்.

No comments
Thank you for your comments