மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் மாபெரும் பொது கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக காஞ்சிபுரம் வணீகர் வீதியில் மாநகர திமுக செயலாளர் சிகேவி தமிழ்செல்வன் அவர்கள் தலைமையிலும் 1வது பகுதி செயலாளர் திலகர் அவர்கள் வரவேற்புரையில் நடைபெற்று வரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் மாபெரும் பொது கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் MLA, தலைமை பேச்சாளர் ஆத்தூர் சபரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், பி.எம்.பாபு, மாநில அணிகளின் நிர்வாகிகள் சுகுமாரன், இராமகிருஷ்ணன், சுந்தரவரதன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், ஜெகன்நாதன், ஏ.எஸ்.முத்துசெல்வம், சுப்புராயன், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, பகுதி கழகத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.




No comments
Thank you for your comments