Breaking News

மாட்டு இறைச்சி கடை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம்  கீழச்சேரி கிராமம் அருந்ததியர் புறத்தில் அனுமதியின்றி மாட்டு இறைச்சி கடை இயங்கி வந்ததை கண்டித்து  அருந்ததியர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் 


இச்சம்பவம் குறித்து தாசில்தார்  காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மற்றும் BDO இவர்கள் நேரில் வந்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த டில்லி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தர மற்ற முறையில் இறந்த மாடுகள் மற்றும் சுகாதாரமற்ற மாடுகளை இறைச்சிக்காக  அறுத்து விற்பனை செய்து பிளாஸ்டிக் பேரல்களில் பழைய எலும்புகள் மற்றும்  தோல் பகுதிகள்  ரத்த கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசியும் முறையான சான்றிதழ் இல்லாமல் கடையை நடத்தியும் பொதுமக்கள் கேட்கும் பொழுது தகாத வார்த்தைகளால் பேசியும் அடி ஆட்களை வைத்து மிரட்டுவதும் சாலையில்  செல்ல முடியாமல் வாகனங்களை நிறுத்தியும் பள்ளி மாணவர்கள் வயதானவர்கள் கடந்து  செல்ல முடியாமல் தவிக்கின்றனர் 


இது குறித்து பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்து  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர் 

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டர் திரு. குணசேகரன் முறையான சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்த கடையையும் கடையில் உள்ள இறைச்சிக் கழிவுகளை அகற்றியும் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

No comments

Thank you for your comments