அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுத்த இலவச சைக்கிள்கள் இரும்பு கடையில் குவிந்து கிடப்பதை கண்டுகொள்ளாத பள்ளி கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக, திமுக அரசின் முதலமைச்சர் சுமார் 323 கோடி செலவில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் விருத்தாச்சலம் ஆலடி ரோட்டில் உள்ள தனியார் இரும்பு கடையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள், புத்தம் புதிதாக, ஸ்டிக்கர் கூட பிரிக்காமல், பத்துக்கு மேற்பட்ட சைக்கிள்கள் குவிந்து கிடப்பதால், பெற்றோர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீண்ட தூரத்தில் வரக்கூடிய ஏழை எளிய மாணவர்களுக்காக கொடுக்கப்பட்ட இலவச சைக்கிள், இரும்பு கடைக்கு எவ்வாறு சென்றது எனவும், ஏற்கன அரசு கொடுத்த இலவச சைக்கிள்கள், தரம் இல்லாத நிலையில் இருப்பதாக பலரும் குற்றசாட்டி வந்த நிலையில், மாணவர்களே எடைக்காக, சைக்கிளை கொண்டு சென்று விற்பனை செய்தார்களா? எனவும் சமூக அலுவலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மாணவர்களுக்காக வழங்கப்பட உள்ள இலவச சைக்கிளை பணதிற்காக, பள்ளி நிர்வாகமே கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனரா...? எனவும், எந்தப் பள்ளியில் கொடுக்கப்பட்ட சைக்கிள், இரும்பு கடைக்கு கொண்டு வந்தது யார் எனவும், அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறனர்.
மாணவர்களுக்கு முறையாக இலவச சைக்கிள் வழங்கப்பட்டதா...? என பள்ளி கல்வித்துறை கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறனர்.


No comments
Thank you for your comments