ஆவடி மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில் முறைகேடுகள்
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் தற்போது நகர அமைப்பு பிரிவில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக காலச்சக்கரம் நாளிதழில் வெளியிட்டிருந்தோம். இதன் எதிரொலியாக சத்தியசீலன் ஏஇ அவர்கள் மாற்றப்பட்டார் ஏஇ ஷோபனா அவர்களுக்கும் நகரமைப்பு பிரிவில் கொடுத்திருந்த 12 வார்டுகளையும் எனக்கு வேண்டாம் என்று கொடுத்துவிட்டார்.
இதையடுத்து நிர்மலா மட்டும் நகர அமைப்பு பிரிவில் பணம் மழையில் நனைந்து வந்தார். உடனடியாக வரைமுறை படுத்தாத இடங்களுக்கு அனுமதி அளித்ததாலும், அனுமதி வழங்காத கட்டிடங்களுக்கு சென்று கட்டிங் வசூல் செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து 36 வார்டுகளை நகரமைப்பு அலுவலர் வேலாயுதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நகரமைப்பு அலுவலர் நகரமைப்பு ஆய்வாளராகவும் 36 வார்டுகளை கைப்பற்றி அனுமதியில்லாமல் கட்டும் கட்டிடங்களுக்கு பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்ததாகவும், அனுமதி வழங்கிய கட்டடங்கள் முறையாக கட்டப்படாமல் விதிமுறைகள் மீறி விருப்பம் போல் கட்டிக்கொள்ள பல லட்சங்களை கையூட்டாக பெற்றார் என்று புகார் வந்ததை தொடர்ந்து இவருக்கு ஆணையர் தர்பகராஜ் சார்ஜிங் கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சிக்கு ஆறு பொறியாளர்களை நியமனம் செய்து தலைமை உத்தரவிட்டதன் அடிப்படையில் ஐந்து பொறியாளர்கள் ஆவடி மாநகராட்சிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.
தற்போது வேலூர் மாநகராட்சியில் பொறியாளராக இருந்த மதிவாணன் ஆவடி மாநகராட்சியில் பணியில் சேர்ந்தார்.
இவர் வருவதற்கு முன்பு ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சரமான சாமு நாசரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வேலாயுதம் அவர்களிடமிருந்து 12 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளதாக அதிர்ச்சி தகவல் உலாவருகிறது.
இவர் வேலூரில் விளையாடியது போல் ஆவடியிலும் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments
Thank you for your comments