Breaking News

குழந்தையின் கழுத்தில் இருந்து தொலைந்த செயின்... விரைந்து கண்டுபிடித்து ஒப்படைப்பு...

ஒரு தம்பதியினர் தன்னுடைய குழந்தையோடு கோவிலுக்கு வந்திருந்தனர். குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டது. மிகுந்த மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் கோவில் அலுவலகத்தில் ஸ்ரீமணியக்காரரரை அணுகி புகார் அளித்தனர். 



அவர் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுத்தார். காவலர்களும் உடனடியாக வந்து விசாரணை சென்றுக் கொண்டிருந்த நிலையில் நமது NACSS Team-ன் தூய்மை பணியாளர் திருமதி.ஜீவாம்பாள் அவர்கள் நந்தவனம் குப்பைத்தொட்டி பக்கத்தில் அந்த செயினை கண்டறிந்து அதனை விரைந்து ஸ்ரீமணியக்காரரிடம் ஒப்படைத்தார். 

அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

அவர் அதனை பெற்றுக்கொண்டு நெகிழ்ச்சியோடு  தெரிவித்ததோடு திருமதி.ஜீவாம்பாள் அவர்களின் செயலை ஊக்குவிக்கும் விதமாகவும், கௌரவபடுத்தும் விதமாகவும் காவலர்கள் மற்றும் திருமதி.ஜீவாம்பாள் அவர்களின் முன்னிலையில் செயினை உரியவர்களிடம் ஸ்ரீமணியக்காரர் அவர்கள் ஒப்படைத்தார்

No comments

Thank you for your comments