Breaking News

ரூ.1.27 கோடி சொத்து வரி பாக்கி... BSNL அலுவலகத்திற்கு ஜப்தி நோட்டீஸ்

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காமராஜர் தெரு, வணிகர் வீதி, என இரு பகுதிகளில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.



பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, உள்ளிட்டவை எதையும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.

அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மேயர், கவுன்சிலர்கள் என உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று உள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதியிணை ஏற்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை  வசூல் செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பலமுறை நோட்டீஸ் அளித்தும் வரிபாக்கியை செலுத்தாத நிலையில், தற்பொழுது சொத்து வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டி காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் வழங்க பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்றனர்.

பிஎஸ்என்எல் அலுவலக அதிகாரிகள் நோட்டிசை வாங்க மறுத்ததால், மாநகராட்சி அதிகாரிகள் அலுவலக வாசலில் ஜப்தி நோட்டீசை ஓட்டிவிட்டு சென்றனர்.

மத்திய அரசின் அலுவலகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments