வரிபாக்கி செலுத்த தவறிய தனியார் பெட்ரோல் பங்க், உணவகங்களுக்கு, நகர மன்ற தலைவர், ஆணையாளர் அதிரடி உத்தரவு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 33-வார்டுகளுக்கு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிதி நெருக்கடியில் விருத்தாசலம் நகராட்சி உள்ள காரணத்தால் நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் விருத்தாசலத்தில் தனியார் பெட்ரோல் பங்க் தனியார் உணவகங்கள் கடந்த சில நாட்களாகவே நகராட்சி நிர்வாகத்திற்கு வரி கட்டாமல் காலம் கடத்தி வந்தனர்.
இந்நிலையில், விருத்தாசலம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை உடனடியாக வசூல் மையங்களில் கட்டக்கோரி நகராட்சி 33 வார்டு முழுவதும் நகராட்சி ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.
வரி பாக்கி அதிகமாக உள்ள நிறுவனங்களில் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர் சேகர் ஆகியோர் ஒன்றிணைந்து நகரம் முழுவதும் வரி பாக்கி உள்ள விருத்தாசலம் பெரியார் நகரில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க், பஸ் நிலையத்தில் உள்ள தனியார் உணவகம் உள்ளிட்டவைகளுக்கு நேரில் சென்று நிலுவையில் உள்ள வரியினை உடனடியாக செலுத்திட வேண்டும் இல்லையென்றால் நோட்டீஸ் ஓட்டப்படும் பின்புசீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


No comments
Thank you for your comments