Breaking News

விருத்தாசலம் அருகே மக்கா சோளத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி  சுந்தரவடிவேல் இவர் தனது இரண்டு ஏக்கர் வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார் 



தற்பொழுது அறுவடை செய்து விற்பனைக்காக வயலில் குவித்து வைத்திருந்துள்ளார். இரவு பகல் 24 மணி நேரமும்  மக்காச்சோளத்திற்கு  பாதுகாப்பாக சுந்தர வடிவேல் இருந்துள்ளார் 

நேற்று மாலை சுந்தர வடிவேல் வீட்டிற்கு உணவு அருந்த சென்ற நேரத்தில்   மர்ம நபர்கள் சுமார் 80 மூட்டை அளவுள்ள இரண்டு லட்ச ரூபாய் மதிப்புடைய மக்காச்சோளத்திற்கு தீ வைத்துள்ளனர். 

இதில் மக்காசோளம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது இதனை அடுத்து மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் சுந்தர வடிவில் கொடுத்த புகாரின் பேரில் விவசாயின் மக்காச்சோளத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

அறுவடை செய்து வைத்திருந்த விவசாயின் மக்காச்சோளத்திற்கு தீ வைத்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments