புனரமைக்கப்படும் பாலாறு குடிநீர் பணியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் ஆய்வு
ரூபாய் மூன்று கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் பாலாறு குடிநீர் பணியினை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்டவைகளை கண்காணித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்லாயிரம் குடியிருப்புகளில், பல லட்சம் மக்கள் வசித்து வருகின்ற நிலையில், இவர்களுக்கு நாள்தோறும் தேவையான குடிநீர் அளிப்பதில் மாநகராட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் பாலாறு மற்றும் திருப்பாற்கடல் பகுதியில் இருந்து பெறப்பட்டு நாள்தோறும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பேரிடர் காலங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைவதை தவிர்க்க காஞ்சிபுரம் மாநகராட்சி ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது.
அவ்வகையில் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் பாலாறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் பைல் பவுண்டேஷன் முறையில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டும், ஆழ்துளை கிணற்று பகுதியில் இருந்து நீர் தேக்க தொட்டி வரை செல்லும் குழாய் பைப்கள் நீரில் அடித்து செல்லாத வகையில் மெட்டாலிக் பைப் பொருத்தப்பட்டு குடிநீர் வழங்க பணிகள் கடந்த வாரம் துவங்கியது.
தற்போது சுமார் 40 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய் பைப்புகள் வந்த நிலையில் , அதற்கான பணிகள் துவங்க உள்ள நிலையில் அதனை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு , சுரேஷ் , விஸ்வநாதன், கார்த்திக் , கயல்விழிசூசை, சங்கர், பிரேம் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி பொறியாளரிடம், பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் அங்கிருந்த மாமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் கேட்டு அதற்கேற்றவாறு மாற்றுப் பணிகளையும் மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால் எவ்வகை பேரிடர் காலங்களிலும் குடிநீர் வழங்கும் பணி தடைபடாது என்பதும், அதிக பொருட்செலவில் இப்ப பணி மேற்கொள்ளப்படுவதால் தரமானதாக மேற்கொள்ள ஒப்பந்ததாரர் மற்றும் அதை கண்காணிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது வருவதால் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் தெரிவித்தார்.




No comments
Thank you for your comments