போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டணை விதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன்(42) த/பெ வேதகிரி என்பவர் கடந்த 22.10.2015 அன்று 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது சம்பந்தமாக அப்போதைய காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்யப்பட்டு, வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அஞ்சாலட்சுமி, நீதிமன்ற காவலர் திருமதி.லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி.N.புவனேஷ்வரி, M.L., ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் 22.01.2023 அன்று , மேற்படி வழக்கின் எதிரி சிங்காரவேலனுக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.R.K.P.தமிழரசி, M.L., அவர்கள் மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து 15 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 15,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் நிவாரணத் தொகை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும். இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் ஆய்வாளர் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments
Thank you for your comments