வாகனங்களில் பிரதிபலிப்பு அட்டை குறித்த ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் தூய்மை சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இரவு நேர சோதனை மட்டும் ஆய்வினை மேற்கொள்ளும் போது ஸ்ரீ பெருமந்தூர் டோல்கேட் பகுதியில் வாகனங்களில் பிரதிபலிப்பு அட்டை குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.
2023 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு வாரம் இரண்டாம் நாள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் பின்பக்க சிவப்பு நிற பிரதிபலிப்பு அட்டை (red replied sticker) ஓட்டப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்து அவற்றை ஒட்டப்படவில்லை என்றால் வாகனங்களுக்கு புதியதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாழ்வு ஸ்ரீபெருமந்தூர் டோல் பிளாசா இடத்தில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தினகரன், ஸ்ரீபெரும்புதூர் குமரா ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காஞ்சிபுரம் கா. பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதூர் கிருஷ்ணன், தாம்பரம் சோமசுந்தரம் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம் அனைத்து ஓட்டுனர்களையும் ஒன்றிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பிரதிபலிப்பு அட்டை ஒட்டுவதற்கான காரணங்களை விளக்கி கூறினார்.
வாகனங்கள் பொதுவாக பின்பக்கமாக மோதி சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்படுத்துவதாகவும் மேலும் நின்று கொண்டிருக்கும் வாகனங்கள் பின்புறம் கவனம் இன்றி பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதும் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருவதை தடுக்கவே வாகனங்களின் பின்புறம் பிரதிபலிப்பு அட்டை சிவப்பு நிறத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
இவற்றால் தூரத்தில் இருந்து வாகனங்கள் முன்னால் நிற்கப்படுவதோ அல்லது வேககுறைவாக செல்வதையோ கவனிக்கும் ஓட்டுநர்கள் கவனமாக பயணிப்பார்கள் என்ற நோக்கில் சிவப்பு நிற பிரதிபலிபாட்டை அனைத்து வாகனங்களுக்கும் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வாகன ஓட்டிகள் இந்த பிரதிபலிப்பு அட்டையை முழுவதுமாக கடைப்பிடித்தால் பல்வேறு கவனக்குறைவான விபத்துக்கள் நடைபெறுாமல் தடுக்கப்படும் என ஓட்டுநர்கள் மத்தியில் மோட்டார் வாகன ஆய்வாளர் எடுத்துரைத்தார்.
மேலும் நீண்ட தூர பயணமாக கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதால் அவர்கள் சோர்வடைந்து விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவ் வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்களுக்கு தேநீர் இலவசமாக வழங்கி நீண்ட பயணம் செய்யும் வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் ஓய்வெடுத்து பிறகு வாகனத்தை இயக்க வேண்டும் என ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கனரக வாகன ஓட்டுனர்கள் தங்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளை கேட்டு பின்பற்றுவோம் எனவும் இனி நீண்ட தூர பயணம் சிறிது ஓய்வுக்கு பின்னரே தொடரும் எனவும் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் உறுதியளித்து இரவு நேரங்களில் தங்களுக்கு தேநீர் வழங்கி பல்வேறு வழிகாட்டுதலை கூறிய மோட்டார் வாகன அலுவலர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments