தமிழ் கலாச்சார பண்பாட்டுடன் கோலாகலமாக சமத்துவ பொங்கல் திருவிழா
காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு சமத்துவ பொங்கல் திருவிழா தமிழ் கலாச்சார பண்பாட்டுடன் கோலாகலமாக நடைபெற்றது.மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக காஞ்சிபுரம் மாநகர கழகம் மற்றும் மாநகர விவசாய அணி சாரிபில் ஓரிக்கை பச்சையம்மன் நகர் பகுதியில் நடைபெற்ற தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் திருவிழா காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் தலைமையிலும் மாநகர விவசாய அணி அமைப்பாளர் சதீஸ் வரவேற்புரையிலும் நடைபெற்றது.
இவ்விழாவில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும்மான க.சுந்தர், காஞ்சிபுரம்நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட துணை செயலாளர் க.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மங்கள இசையுடன் பொங்கல் வைத்து, விளையாட்டு போட்டிகள், சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சி,பள்ளி மாணவர்களின் இலக்கிய சொற்பொழிவு, தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட தமிழ் கலாச்சார பண்பாட்டுடன் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்வுகளை கண்டு போட்டிகளை வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலாளர் சுந்தர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி,பகுதி செயலாளர்கள் திலகர்,சந்துரு,தசரதன்,வெங்கடேசன்,மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன்,மாவட்ட பிரதிநிதிகள சுகுமாரன், விஸ்வநாதன், மாமல்லன், சுரேஷ், சங்கர், ரவிக்குமார், வரதராஜன், பாலமுருகன், சேகர், பிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், மாமன்ற உறுப்பினர் சங்கர்,மண்டல குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், மாநகர-பகுதி நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




No comments
Thank you for your comments