Breaking News

இரவு நேரத்தில் திருடும் திருடன் கைது

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த திருன்றவூரில் வீடுகளில் திருடிய நபர் கைரேகை மூலம் கைது செய்தனர்  


2021 ஆம் ஆண்டில், பார்த்தசாரதி(49) அண்ணாநகர், திருநின்றவூர், ராஜ்குமார்(48) மற்றும்  திருமதி. கஸ்தூரி (73) திருநின்றவூர் பகுதியை சார்ந்தவர்கள் T11.திருநின்றவூர் காவல் நிலையத்தில் தங்களது வீடுகளில்  தங்க நகைகள் திருடு போனதக புகார் அளித்தனர் இந்த புகாரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப காவல் ஆணையாளர் , T11.திருநின்றவூர் காவல் நிலைய எல்லையில் இரவு நேரங்களில் நடைபெற்ற திருட்டு வழக்குகளை கண்டு பிடிக்க உத்தரவிட்டார். ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்,  திருநின்றவூர் காவல் நிலையம்  அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

தனிப்படையினர் திருடப்பட்டவர் கைரேகை பதிவுகளை கொண்டு விசாரணை செய்து  சங்கரபாண்டியன்(48), த/பெ.மயிலேரி நாடார், புதிய கல்பாக்கம் குப்பம், மேல்நேமிலி, கோவளம் என்பவரை கைது செய்தனர் இவரிடம் இருந்து  3 வழக்குகளில் தொடர்புடைய 12 சவரன் தங்க நகைகளை தனிப்படையினர்  மீட்டனர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றக் காவலுக்காக கனம் குற்றவியல் நடுவர்-II திருவள்ளுர் அவர்கள்  முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கைதியை புழல் சிறையில் அடைத்தனர்

சந்தீப் ராய் ரத்தோர் காவல் ஆணையார் அவர்கள் வீடுகளில் களவு செய்து எதிரியின் கைரேகை பதிவின் மூலம் கைது செய்த, வழக்கின் சொத்துக்களை  மீட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்ட ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார்கள்.

No comments

Thank you for your comments