Breaking News

காஞ்சிபுரம் மாவட்டம் 2023 சாலை பாதுகாப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக பாதசாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

காஞ்சிபுரம், ஜனவரி 16 -

காஞ்சிபுரம் மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்  கா.பன்னீர்செல்வம்,  சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.விநாயகம் , யங் இந்தியன்ஸ் அமைப்பு , ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் , அறம் பழகு அறக்கட்டளை , காஞ்சிபுரம் கிரசன்ட் லயன்ஸ்





கிளப் ஆகியோரை இணைத்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் இதர பகுதிகளில் 16.01.2023 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில்,  சாலையில் செல்லும் பாதசாரிகளை ஒருங்கிணைத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சாலையை பாதுகாப்பாக எவ்வாறு கடப்பது , பாதுகாப்பாக குழந்தைகளை எவ்வாறு சாலையில் அழைத்துச் செல்வது, பேருந்தில் பாதுகாப்பாக எவ்வாறு ஏறி இரங்குவது போன்ற விளக்க உரைகளை  ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினார் மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்ட செயலாளர் ஜி முருகேஷ் , யங் இந்தியன்ஸ் அமைப்பைச் சார்ந்த ராஜராஜன் , கமலேஷ், சதீஷ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் காஞ்சிபுரம் கிராண்ட் தலைவர் அருண்குமார் மற்றும் உறுப்பினர்கள், காஞ்சிபுரம் கிரசன்ட் லயன்ஸ் கிளப் சங்க சாசன தலைவர் எம்.சத்யாமூர்த்தி, பொருளாளர் வரலட்சுமி பிரபாகரன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments