Breaking News

பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகள் கைது

ஸ்ரீபெரும்புதூர் :




ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் 11.12.2022 அன்று இரவு 24.00 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர், எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையில் நடந்து சென்றபோது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் அப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.06/2022 u/s 363, 376, 506(ii) IPC- ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை விரைந்து பிடிக்க வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.N.கண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில்.l, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.P.பகலவன். இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய திரு.சுனில், காவல் துணை கண்காணிப்பாளர், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் அவர்களின் தலைமையில் தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு எதிரிகளை தேடி வந்த நிலையில் 

1)நாகராஜ் (எ) நாகா(31) த/பெ.பஞ்சாட்சரம், பெருமாள் கோயில் தெரு, சுண்ணாம்புக்குளம், கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம், 

2)பிரகாஷ்(31) த/பெ.செல்வம், பெருமாள் கோயில் தெரு, சுண்ணாம்புக்குளம். கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம் ஆகியோர்கள் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரியவந்ததையடுத்து மேற்படி இரண்டு நபர்களும் காவல் துணை கண்காணிப்பாளர், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் அவர்களின் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இவர்கள் இருவரும் 12.01.2023 அன்று 21 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் அருகே சுமார் 23.30 மணிக்கு தொந்தரவு செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. 

அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் காஞ்சி தாலுக்கா காவல் நிலைய குற்ற எண். 27/2023 u/s 341, 294(b), 354, 506(i) IPC r/w Sec.4 of Women Harassment Act - ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தில் இவர்கள் இருவரும் களவு கொள்ளை, வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களிலும் காஞ்சிபுரம் தவிர அரக்கோணம், திருவள்ளுர், செய்யாறு மற்றும் சில இடங்களிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

நாகராஜ் (எ) நாகா என்பவர் மீது திருட்டு, வழிப்பறி மற்றும் கன்னக்களவு வழக்குகள் உள்ளது. மேலும் இவர்கள் தங்களை காவலர்கள் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளதும் தெரியவந்தது. 

மேலும் இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி வாக்கிடாக்கி, லத்தி, இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், நெம்பர் பிளேட் கட்டர், மிளகாய்பொடி, சாவி, ரிவால்வர் ரவுண்ட்ஸ், ராடு, கையுறை மற்றும் முகமுடி ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேற்படி குற்ற வழக்குகளில் சாதுர்யத்துடனும், துரிதத்துடனும் செயல்பட்டு எதிரிகளை விரைந்து கைது செய்தததற்காகவும், கடந்த ஓராண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடிகள் 568 நபர்களில் இதுவரை 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும், 49 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்தும், 343 நபர்கள் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் ஓராண்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், பிணையத்தை மீறி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 26 நபர்களை ஓராண்டு சிறையில் அடைத்தும் மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் 234 நபர்களை சிறையில் அடைத்தும் ஆக மொத்தம் 779 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்காகவும், மேலும் வழக்கமான குற்றவாளிகளின் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமான விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கையை

நீதிமன்றத்தில் தாக்கல்செய்து நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களையும் மற்றும் தனிப்படையினரையும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.N.கண்ணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

No comments

Thank you for your comments