பொங்கல் நலதிட்டம் பெற குவிந்த மக்கள் கூட்டம்..
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலை 6 மணிக்கு துவங்கி தொடர்ந்து மக்களுக்கு புத்தாடை, பரிசு பணத்துடன் பொங்கல் பரிசுகளை வழங்கி வரும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ... பொங்கல் நலதிட்டம் பெற மக்கள் கூட்டம் குவிந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரும் , பிரபல தொழிலதிபர் எஸ்.கே.பி.சீனுவாசன். இவரது மனைவி திருமதி சாந்திசீனுவாசன் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் , மண்டல குழு தலைவராகவும் உள்ளார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். கடைசி நாளான காணும் பொங்கல் அன்று, தம் தம் உறவினர்களை வீடுகளுக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து அவர்களுடன் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் காணும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது..
அவ்வகையில் திமுக பொதுக்குழு உறுப்பினரான எஸ்.கே.பி சீனிவாசன், காலம் காலமாக தமது பகுதி பொதுமக்களை காணும் பொங்கல் அன்று தனது இல்லத்தில் சந்திப்பது வழக்கம்.
அப்போது அவர்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்து தெரிவிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இன்று இப்பரிசு பொருட்களை பெற அப்பகுதி பொதுமக்கள் அல்லாது அனைவரும் அவரை சந்தித்து பரிசு பொருட்கள் பெற நீண்ட வரிசையில் தற்போது காத்து வருகின்றனர்.
காலை ஆறு மணிக்கு துவங்கிய இந்த நிகழ்வில் தொடர்ந்து தன்னை சந்திக்க வரும் பகுதி மக்கள் மற்றும் அனைவருக்கும் புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
இன்னும் சில ஆயிரம் பேர் வரிசையில் காத்திருக்கும் நிலையில் மாலை 6 மணி வரை வழங்க முடிவு செய்து காத்திருக்கும் நபர்களுக்கு குடிநீர், குளிர்பானங்களும் வழங்கி அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையில் கட்சி பிரமுகர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலரும் இவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வரை சுமார் 4,000 மேற்பட்டோர் புத்தாடைகளையும் பரிசு பொருட்களையும் பெற்று செல்கின்றனர்.
தன்னை நாடிவரும் அனைவருக்கும் இன்று பொங்கல் பரிசுகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது நீண்ட காலமாக நடைபெற்று வருவது மக்கள் தங்களை வாழ்த்துவதும் எல்லையற்ற மகிழ்ச்சி அளிப்பதாக அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் , மெடிக்கல் ரவி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட, மாநகர திமுக நிர்வாகிகள், 32 வட்ட இளைஞரணியினர் உடன் இருந்தனர்.




No comments
Thank you for your comments