Breaking News

திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு மர்மமான முறையில் இறப்பு

விருத்தாசலம் செல்வராஜ் நகரில் திருமணம் ஆகி 7 மாதங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு மர்மமான முறையில் இறப்பு காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர்ஜான் செல்வராஜ், அமுதா தம்பதியினரின்மகள் கெட்சியாள் தந்தை இறந்த நிலையில் தனது தாய் அமுதா உடன் வசித்து வந்துள்ளார்

அதே பகுதி எதிர்வீட்டில் வசிக்கும் பன்னீர்செல்வம், லட்சுமி, தம்பதியினரின் மகன் விக்கி,  கெட்சியாளும், விக்கியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள் திருமணம் நடந்து 7 மாதம் ஆன நிலையில் நேற்று மாலை கெட்சியாள் மர்மமான முறையில் தனது வீட்டில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்துள்ளார்

இதனை அறிந்த அவர்களின் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்ற நிலையில் நேற்று இரவே இறந்தகெட்சியாளின் கணவன் விக்கியும்அவனது முகம் தெரியாத நண்பர்களோடு சேர்ந்து தான் வசித்து வந்த வீட்டை நெறுப்பு வைத்து கொளுத்தி விட்டு ஓடி தலை மறைவாகி உள்ளனர்

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

இது குறித்து அறிந்த காவல்துறையினர்சம்பவ இடத்திற்கு சென்று கெட்சியாளின்உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

இது குறித்து கெட்சியாளின்,சகோதரி கிரேசி,விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்ததின் பேரில் விருதாச்சலம் காவல்துறையினர்விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவாகியுள்ள கெட்சியாளின்  கணவன் விக்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  

திருமணம் ஆகி 7 மாதங்களில் ஆன நிலையில் புதுப்பெண் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து போனது அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments