கஞ்சா வேட்டை... மேற்கு வங்காளத்தை சேர்ந்த இரு பெண்கள் கைது...
திருவள்ளூர் மாவட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் போதையில்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதைபொருள் ஒழிப்பு சம்மந்தமாக சந்தீப் ராய் ரத்தோர் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுப்படி இன்று 18/01/2023-ஆம் தேதி அம்பத்துர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திருமதி தனம்மாள் நடத்திய கஞ்சா வேட்டையில் கொரட்டூர் இரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டு அருகில் சுமார் 12 கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர்கள் அனீமாதாஸ் (46)கபெ பிசுதாஸ்(லேட்), தாஸ்பாரா மேற்கு வங்காளம் மாநிலம் என்பவரும், சந்தியா தாஸ் (34)க/பெ பிசுவஜித் தாஸ், தாஸ்பாரா, கிழக்கு உதயராஜ்புர் மேற்கு வங்காளம் மாநிலம் என்பவர்களிடமிருந்து கஞ்சா என்னும் போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக பெண் நபர்களை கைது செய்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட அம்பத்துர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திருமதி. தனம்மாள், அவர்களையும் அவர்களின் தனிப்படையினரையும் ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்


No comments
Thank you for your comments