மங்களூரில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி தொகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்
இதனை அடுத்து எட்டு கோடி ரூபாய் செலவில் திட்டக்குடி அடுத்த மங்களூரில் மின்சார பணியாள் மோட்டார் மெக்கானிக் நில அளவையர் குளிர் பதனம் மற்றும் தட்பவெட்பம் நிலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் பாடப்பிரிவுகளுடன் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டது
இதனை அடுத்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ. கணேசன் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார் பின்னர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு தேர்வு பெற்ற 62 மாணவிகளுக்கு சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.


No comments
Thank you for your comments