Breaking News

காஞ்சிபுரம் பில்லா பாங் உயர் சர்வதேச பள்ளியில் மாபெரும் மாணவர் திறன் கண்காட்சி விழா!

காஞ்சிபுரம் ஜன 7-

காஞ்சிபுரம்   வெள்ளகேட் பகுதியில் இயங்கி வரும் பில்லா பாங் சர்வதேச பள்ளியில்   மெகா பெஸ்ட் 2023 எனும் தலைப்பில் மாணவர்களின் கற்பனை திறன்களையும் தனித்திறமையையும் வெளிக் கொணரும் வகையில் ராக்கெட் தளம்,  தஞ்சை பெரிய கோவில், உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்கள் மாபெரும் கண்காட்சி நடைபெற்றது.  



இக்கண்காட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் த மகாலட்சுமி யுவராஜ் மற்றும் பில்லா பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி,  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். 

இதில்  எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள 1600 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு  கற்பனை திறன் மூலம் தமிழக புகழ் மிகு  கோயில்களின் வடிவங்கள்,  

இயற்கை மருத்துவம்,  இயற்கை உணவு,  இயற்கை பாதுகாப்பு மற்றும் மின்சாதன,  மின்னணுவியல் பற்றிய மாதிரிகளை வடிவமைத்து 31 அறைகளில் அனைவரின் பார்வைக்கும் வைத்து,  அதுகுறித்து விளக்கமும் அளித்தனர். 

இந்த மாபெரும் கண்காட்சி  காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.  

இதில் பில்லாபாங்க் பள்ளி  நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம், தயாநிதி மற்று பள்ளி முதல்வர் காமேஸ்வர்ராவ், ஒருங்கிணைப்பாளர்கள் மனிஷ்,, பத்மாவதி, ஏஞ்சல், தீபக், பவித்ரா, வரதராஜன் ஆசிரியர்கள்,  பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.




பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவது- முதல்வர் ஆவேசம்


பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு


🖱 ரபேல் வாட்ச் விவகாரம்..நாம் போட்டுள்ள சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள்-அண்ணாமலை



🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

No comments

Thank you for your comments