உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் உடல் நல குறைவால் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம் இவருடைய மகன் சூர்யா (வயது 20), தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் தொழில் செய்பவர். இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார்.
தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி 10 நாட்களாக அந்த மருந்துகளை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 1 ம் தேதி இரவு சூர்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் மோசமான நிலையில் போன காரணத்தால் உறுவினர்கள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments