Breaking News

கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையை வட்டியோடு சேர்த்து தர கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்கம் சார்பில், திரு ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வட்டியோடு சேர்த்து தர கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் 



கடலூர் மாவட்டம்விருதாச்சலம் பாலக்கரை சந்திப்பில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில்,கரும்புவிவசாயிகளுக்கு கொடுக்க வேண்டியநிலுவை தொகையை வழங்கிட வலியுறுத்திநடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையிலும்

கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை வட்டியுடன் ஒரே தவணையில் வழங்கிட , ஏ.சித்தூர் திரு ஆருரான்சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜன் முறைகேடாக கரும்பு விவசாயிகள் பெயரில் குமார் 300 கோடி தேசிய வங்கிகளில் அடமானம் வைத்து ஏமாற்றியதை கண்டித்தும் அவரை கைது செய்து வங்கிகளின்கடனை முழுவதையும் போர்க்கால அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து பைசல் செய்து விவசாயிகளை விடிவித் திட கோரியும், 

இதுநாள் வரைவங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள கரும்பு பயிர் கடன் தொகையினை முழுவதையும் ஒரே தவணையில் வங்கியில் செலுத்திடவும்,பெற்று கூலி வாகன வாடகை முழுவதும் வட்டியுடன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கிடவும்,

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி... 

செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்

வெளி ஆலைகளுக்கு அனுப்பிய கரும்பிற்கு உண்டான முழு கிரைய தொகையை வட்டியுடன் ஆலை நிர்வாகமே முழு பொறுப்பேற்று விவசாயிகளுக்கு வழங்கிடவும்,திரு ஆருரான் சர்க்கரை ஆலை தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் வெளிப்படத் தன்மையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் முத்தரப்பு கூட்டத்தை நடத்திட கோரியும்சாலையில் அமர்ந்து முழக்கங்களிட்டுஆர்ப்பாட்டம் செய்தனர்

அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆர்ப்பாட்டம் செய்த கரும்பு விவசாயிகளை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது மீறி நடத்தினால் கைது செய்வோம் என காவல்துறையினர் எச்சரித்ததின் பேரில்விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு சார் ஆட்சியர் அலுவலகம் சென்றனர்அங்குஇதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என சார்ஆட்சியர்கூறியதால்கலைந்து சென்றனர்

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்யமுற்பட்ட கரும்பு விவசாயிகளைகைது செய்ய50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

No comments

Thank you for your comments