Breaking News

சோராஞ்சேரி ஊராட்சியில் பரபரப்பான கிராம சபை கூட்டம்

பரபரப்பான கிராம சபை கூட்டம் சோராஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம்  பூவிருந்தவல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி  ஊராட்சியில் அரசு பள்ளிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் அவர்கள் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார் 

பிறகு   சோராஞ்சேரி அரசு பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஏடி சிவசங்கரி மற்றும் கால்நடை மருத்துவர் ஊராட்சி ஒன்றிய துணை  அலுவலர் இளங்கோவன் கலந்து கொண்டார் 


இக் கூட்டத்தில் பல ஆண்டு காலமாக சுடுகாடு இல்லாத அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது புதியதாக சுடுகாடு ஏற்படுத்திக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்த சுடுகாட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.  

இந்த கிராமத்தில் சுடுகாடு பராமரிப்புக்காக அரசு ஒதுக்கும் தொகை எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்று தெரியவில்லை ஆகவே இதற்காக ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும்  பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


அதுமட்டுமல்லாமல் சோராஞ்சேரி கிரமத்திற்க்கு மிக அருகாமையில் குப்பைகளைக் கொட்டி கொளுத்துவதால் இதை சுற்றி இருக்கும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படுகின்றனர் அதனால் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் 

ஊராட்சி ஒன்றியத்தில் ஏறி குளங்கள் இவைகளை ஆய்வு செய்து உடனடியாக தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்  அரசுக்கு சொந்தமாக இருக்கும் இடத்தில் பெயர்பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் .

அடுத்த முறை நடக்க இருக்கும் கிராம சபை கூட்டத்தில் இதுவரை போட்ட தீர்மானங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்

No comments

Thank you for your comments