முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 43 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 51 வகையான போட்டிகள் 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில், போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்திட 29.01.2023 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண். 7401703481 (அல்லது) 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments