Breaking News

வெற்றிக்கதை: வாழ்வில் ஒளியேற்றி வைத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வாழ்வில் ஒளியேற்றி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்ததோடு அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மனவளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச்சிதைவு பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வருக்கான பராமரிப்பு உதவித்தொகை, சுய வேலைவாய்ப்பு (வங்கிக்கடன்), மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை, அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காள சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்புகண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் மற்றும் பிரெய்லி கைகடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம், முடநீக்குசாதளம் (காலிபர்), ஊன்றுகோல், கை, கால் பாதிக்கப்பட்டவருக்கான திருமண உதவித்தொகை, பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, செவித்திறன் குறைவுடையோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கை, கால் பாதிக்கப்பட்டவர், காது கேளாத பேச்சு குறைபாடுள்ள நபர், பார்வையற்றவர் ஆகிய மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் பட்டதாரி இல்லாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.25,000 மற்றும் பட்டதாரி மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 வழங்கபடுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2022-2023 ஆம் ஆண்டு 02 பயனாளிகளுக்கு ரூ.100000/- மதிப்பிலான திருமண உதவித்தொகையும்,  100 பயனாளிகளுக்கு ரூ.6500000/- மதிப்பிலான தையல் இயந்திரமும், 3483 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 200 பயனாளிகளுக்கு ரூ.601000/- மதிப்பிலான செவித்திறன் கருவியும், 45 பயனாளிகளுக்கு ரூ.607500/- மதிப்பிலான திறன் பேசியும், 4 பயனாளிகளுக்கு மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நாற்காலியும், 22 பயனாளிகளுக்கு ரூ.193600/- மதிப்பிலான தாங்கிகளும், 60 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும், ரூ.8400/- மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

காது கேளாதோருக்கு மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசி வழங்கும் திட்டத்தில் பயனடைந்த காஞ்சிபுரம் வட்டாரத்தை சார்ந்த பயனாளி:

முகமது இஸ்மாயில் (வயது:19) கூறியதாவது:

நான் பி.சி.ஏ படிக்கிறேன். நான் காது கேளாத மாற்றுத்திறனாளி என்பதால் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதற்கும் என்னுடைய மேற்படிப்பு தொடர மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது, தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம்,

 18 வயதுக்கு மேற்பட்ட காதுகேளாதோர் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு திறன்பேசி வழங்குவதாக அறிந்தேன். அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு என்னுடைய நிலையை கூறினேன். தற்போது திறன்பேசி கிடைத்தது. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் பி.சி.ஏ மாநில பல்கலைகழகத்தில் படித்து வருகிறேன். பல்கலைகழகத்தின் நன்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களோடு தொலைபேசியில் உறையாடுவதற்கும் உதவியாக இருப்பதால் எனக்கு அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நல்லவாய்ப்பை இத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொகுப்பு:

திரு. க.இராமச்சந்திர பிரபு, 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

திரு.எஸ்.சதீஷ் பாபு, 

உதவி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.


 

No comments

Thank you for your comments