மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஒன்று கூடல் விழா
காஞ்சிபுரம் நடுத்தெருவில் உள்ள மண்டபத்தில் பவ்டா மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஒன்று கூடல் விழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் நடுத்தெருவிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பௌடா மகளிர் சுயவது குழு உறுப்பினர்கள் ஒன்று கூடல் விழா விமர்சையாக நடைபெற்றது நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜாஸ்மின் தம்பி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் பக்தன் அருள்ராஜ் வரவேற்புரையாற்றினார். துணை மேலாண்மை இயக்குனர் அல்பினா ஜாஸ் வாழ்த்துரை வழங்கினார். இதில் முதுநிலை பொது மேலாளர் பாரி துணைப் பொது மேலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
குத்துவிளக்கு ஏற்றி துவக்கப்பட்ட இவ்விழாவில் மகளிர் குழுக்களுக்கான கோலப்போட்டி .உணவு சாப்பிடும் போட்டி. மெழுகுவர்த்தி ஏற்றும் போட்டி. ஹோலி விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் கிளை மேலாளர் அருண்குமார் நன்றிகளை தெரிவித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்





No comments
Thank you for your comments