Breaking News

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தினை நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைப்பு

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தினை நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் வயலூர் 1-வார்டில் தமிழ்நாடு அரசு ''நேரடி நெல்முதல் நிலையம் திறப்பு விழா இன்று தமிழர் வழிபாட்டு முறையில் விவசாயிகளிடமிருந்து முதல் கொள்முதலினை விருத்தாசலம் நகராட்சி வயலூர் ஒன்னாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது

இந்த அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. 


இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.

இதில் வயலூர் பழனிச்சாமி, விவசாய சங்க தலைவர் சுரேஷ், உள்ளிட்ட வயலூர் பொதுமக்கள் அரசு நேரடி கொள்முதல் நிலைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments