பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் நிலையை தெரிவிக்க வகையில் புதிய செயலி
காஞ்சி மாவட்டத்தில் முதன்முதலாக பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் நிலையை ஓரே நேரத்தில் 2000 மாணவ பெற்றோர்களுக்கு தெரிவிக்க வகையில் புதிய செயலி அறிமுகம்.
ஸ்கூல் சைம்ஸ் வாய்ஸ் ஸ்நாப் (SCHOOL CHIMES VOICE SNAP) என்ற புதிய செயலியை அறிமுகபடுத்தி செயல்முறை விளக்கமளித்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட செயலியால் இனி பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பெருநகரில் உள்ள அரசு மாதிரி மேனிலைப்பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசரியர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் ஆகியோரிடையே உள்ள தொடர்பு மேலும் எளிதாக்கும் வகையில் ஸ்கூல் சைம்ஸ் வாய்ஸ் ஸ்நாப்(SCHOOL CHIMES VOICE SNAP) என்ற புதிய செயலியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முதலாக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்ற பட வசனத்திற்க்கு ஏற்ப இந்த செயலி மூலம் பள்ளியில் பயிலும் சுமார் 2000 மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஓரே நேரத்தில் அலைபேசி வாயிலாக பள்ளிக்குறித்து குறுந்தகவல்கள் அலைபேசி வாயிலாக அனுப்ப முடியும். இதன் செயலி மூலம் சுமார் 1லட்சம் நபர்களுக்கு ஓரே நேரத்தில் அலைபேசி வாயிலாக குறுந்தகவல்கள் அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கினறனர்.
இந்த செயலி மூலம் ஸமார்ட் போன் இல்லாத பெற்றோர்களுக்கு அலைபேசி வாயிலாக குறுந்தகவல்கள் அனுப்பமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி சார்ந்த விவரங்கள்,அறிக்கைகள்,பள்ளியில் நிகழும் நிகழ்வுகள், மாணவ, மாணவிகளின் வருகை,தேர்வு நேரத்தில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை இதன்மூலம் பெற்றோர்கள் எளிதில் அறியமுடியும்.
இந்த செயலியின் அறிமுக விழா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைமையாசரியர் மாலதி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் கலந்து கொண்டு செயலியை மாணவர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி செயல்முறை விளக்குமும் செய்து காண்பித்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் கூறுகையில், பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் அவர்கள் சார்ந்த தகவல்களை உடனடியாக பெற்றோர்கள், ஆசரியர்கள் அறியும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய செயலியை மாவட்டத்தில் முதன் முதலாக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் செயல்பாடுகள், மாணவர்களின் வருகைகள் உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் எளிதிலும் உடனுக்குடன் அறியமுடியும்.
இதனைத் தொடர்ந்து, செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) நடராஜன் கூறுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள மாதிரி பள்ளிகளில் முதன்முதலாக இந்த பள்ளியில் தான் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இந்த செயலியின் பயன்கள் என்னவென்றால், இந்த மாணவர்கள் தேர்வு நேரங்களில் காலையில் முனைப்புடன் எழுந்துக்கொள்வதற்கு அலைபேசி வாயிலாக எழுப்ப இயலும்,மாணவர்களை தேர்வு நேரங்களில் ஊக்குவிக்கும் வகையிலும் சொந்த குரலில் பேசி அனுப்பினால் அலைபேசி வாயிலாக அந்த குறுந்தகவல்களை பெறமுடியும்.
குறிப்பாக, மாணவிகள் ஏதேனும் இடையூறுகளால் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ,விடுப்பு எடுத்துள்ளார் என்று அறிந்த 30நிமிடங்களில் மாணவியின் பெற்றோர்களுக்கு அலைபேசி வாயிலாக குறுந்தகவல்கள் அனுப்ப முடியும். இதனால்,எளிதில் மாணவ, மாணவிகளின் நிலைக்குறித்து பெற்றோர்கள் அறியமுடியும்.
மேலும், ஒரு முறை பெற்றோர்கள் அலைபேசி வழியாக வரும் அழைப்பை ஏற்கவில்லை என்றால் 10 நிமடத்திற்க்கு ஒரு முறை அழைப்பு தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கும்.
மேலும், அலைபேசி வாயிலாக அனுப்பப்பட்ட குறுந்தகவல்களை முழுமையாக கேட்டார்களா இல்லையா என்பதும் கூட இதில் எளிதில் தெரிந்துக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.
தற்போது, இந்த செயலியின் அறிமுகத்தால் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்களிடமிருந்தும் தற்போது ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.


No comments
Thank you for your comments