பல்லவன் மருந்தியல் கல்லூரியில் மாபெரும் பாரம்பரிய பொங்கல் திருவிழா
காஞ்சிபுரத்தில் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்லவன் மருந்தியல் கல்லூரியில் மாபெரும் பாரம்பரிய பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
புதுப்பானையில் பொங்கல் வைத்து படைத்தும்,கரகாட்டம், ஒயிலாட்டம்,மயிலாட்டம்,சிலம்பம் என உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த கல்லூரி மாணவர்கள்.
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் பகுதியில் பிரபல தனியார் மருந்தியல் கல்லூரியான பல்லவன் மருந்தியல் கல்லூரியானது இயங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழர் திருநாள் ஆன பொங்கல் பண்டிகையை யொட்டி கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழாவானது மிக கோலாகலமாக நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை புத்தாடைகளை அணிந்துக்கொண்டு புத்தம் புது பானையில் புதுப்பானையில் புத்தரிசி,வெள்ளம், ஏலக்காத், முந்திரி, திராட்சை கலந்து பொங்கல் வைத்து படைத்தும், பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் கோசம் எழுப்பி பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
மேலும் இதில் பல்லவன் மருந்தியல் கல்லூரியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக இந்த பொங்கல் விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்தப் பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் "சாம் விஷால்" கலந்துகொண்டு பல்வேறு பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்லவன் மருந்தியல் கல்லூரி முதல்வர் Dr.J.கார்த்தி, கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் முத்து, சீதாபதி, பழனி, கோபாலகிருஷ்ணன், பாஸ்கர், சந்திரா சம்பந்தமூர்த்தி, சத்தீந்தர், மோதிலால், சுரேஷ்குமார், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments