Breaking News

காஞ்சிபுரத்தில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம், ஜன.24-

இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் தேசிய பெண் குழந்தைகள் தின விழா ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம் : சிறந்த மருத்துவர் விருதை மருத்துவர் அன்புசெல்வனிடம் வழங்கும் இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் எஸ்.மனோகரன்

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர உணவக கூட்ட அரங்கில் இந்திய மருத்துவக் கழம் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்து சிறந்த மருத்துவர்கள் அன்புச்செல்வன்,அரவிந்தன் உள்ளிட்ட பலருக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி.டி.சரவணன்,காஞ்சிபும் கிளையின் செயலாளர் கே.எஸ்.தன்யக்குமார்,பொருளாளர் ஞானகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் முத்துக் குமரன் வரவேற்று பேசினார்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மருத்துவக் கழக மகளிர் பிரிவின் தலைவர் நிஷாப்பிரியா பேசினார்.சென்னை பிரசாந்த் மருத்துவக் குழுமங்களின் தலைவர் கீதா ஹரிப்பிரியா கலந்து கொண்டு மருத்துவர்களின் தியாகச் செயல்கள் என்ற தலைப்பில் பேசினார்.

விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் விக்டோரியா, யோகானந்தம், நரம்பியல் சிறப்பு மருத்துவர் சுதாகர் ஆகியோர் உட்பட மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக கிளையின் மருத்துவக் கல்விப்பிரிவு செயலாளர் என்.எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments