2021 ஆம் ஆண்டு திருகாலி மேட்டில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளி கைது... சிறையில் அடைப்பு...
காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஷ்ணு நகர் பகுதியில் 22-01-2023ஆம் தேதி நல்லிரவு ஒரு மணிக்கு ஒரு நபர் வீட்டில் திருட முயன்றுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி ஃபுட்டேஜ் அடிப்படையாக வைத்து எதிரி காஞ்சிபுரம் கோட்டைமேடு வேகவதி நகர் பகுதியை சேர்ந்த கோபி வயது 42 த/பெ சம்பத் (ஊமை) தெரியவந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அவர்களின் உத்தரவுப்படி காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் அவர்களின் மேற்பார்வையில் மேற்படி நபரை காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்கள் துளசி; செந்தில்குமார்; செல்ல பிள்ளை மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் வெஸ்லி மற்றும் முதல் நிலை காவலர் 2229 நாகராஜன் முதல் நிலை காவலர் 3501 ரமேஷ் பார்ட்டி சகிதம் கைது செய்து விசாரணை செய்ததில் அவர் நேற்று இரவு நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார்
மேலும் 2021 ஆம் ஆண்டு திருகாலி மேட்டில் நடைபெற்ற தாலுகா காவல் நிலையம் நீண்ட மாதங்களாக கண்டுபிடிக்கப்படாத வழக்கு எண்1568/21 u/S380,392@302ipc murder for gain வழக்கு சம்பவத்தை விசாரணை செய்ய வேண்டி எதிரி கோபி பிறப்பிலிருந்து ஊமை என்பதால் செவித்திறன் குறை உடையோர் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் காயத்ரி தேவி அவர்களை அழைத்து மொழிபெயர்ப்பு செய்ததில் எதிரி லாப நோக்கத்தோடு கொலை (murder for gain) செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்
மேற்படி அவர்கள் ஒத்துழைப்போடு விசாரணை மேற்கொண்டு வழக்கின் சொத்துக்களை கைப்பற்றி எதிரியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.

No comments
Thank you for your comments