Breaking News

உதவியாளர் பணிக்கு ஏலம் விட்டு கையூட்டும் பெற்ற வட்டாட்சியர் தனபதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்

விருத்தாசலம் தாலுக்காவில் 17 - கிராமத்தில் உதவியாளர்  பணிக்கு ஏலம் விட்டு கையூட்டும் பெற்ற வட்டாட்சியர் தனபதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டத்தில் 17 கிராம உதவியாளர் பணி நியமனத்தில் மோசடியாக தயாரிக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனை ஆணையை ரத்து செய்ய தகுதியான நபர்களை நியமனம் செய்யக்கோரி இந்திய.ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது

 இந்த ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் நகர செயலாளர் ராஜசேகர், தமிழ்நாடு மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் காமராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலமுருகன், விவசாய சங்க தலைவர் ஜெயக்குரு, ஆதி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திருமாறன், வழக்கறிஞர் சண்முகவேல், தமிழ்நாடு மக்கள் இயக்கம் மாநில தலைவர் மாய முனுசாமி, மக்கள் அதிகாரம் அசோக்குமார், முருகானந்தம், தமிழ் தேச மக்கள் முன்னணி ராஜேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார்.

இதில் கிராம உதவியாளர் பணி நியமனத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடாமல் அவசர கதியில் முறைகேடாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அரசு விடுமுறை தினத்தில் பணியில் சேர வைத்ததை கண்டித்தும்.

கிராம உதவியாளர் பணி நியமனத்தில் அரசாணைக்கு எதிராக இட ஒதுக்கீடு கொள்கைகளைகடைபிடிக்காத செயல்களைக் கண்டித்தும்.

கிராம உதவியாளர் பணி நியமனம் செய்த சம்பந்தப்பட்ட கோப்புகளை கைப்பற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை தொடங்கி வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் வட்டாட்சியர் தனபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்தியாளர் R.காமராஜ் உடன் ஒளிப்பதிவாளர் V.வேல்முருகன்   ✍

No comments

Thank you for your comments