அருள்மிகு சித்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மக நட்சத்திரத்தினை ஒட்டி திருவாசக முற்றோதல் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம் அருள்மிகு சித்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மக நட்சத்திரத்தினை ஒட்டி திருவாசக முற்றோதல் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அருள்மிகு சித்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத மக நட்சத்திரத்தை ஒட்டி காமாட்சியம்மை திருவாசகம் முற்றோதல் பேரவை குழுவினரால் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது இந்த ஆண்டு ஐந்தாவது திருவாசகம் முற்றோதல் இன்று நடைபெற்றது.
இதில் சிவ.வசந்தா. தலைமை தாங்கி சிறப்பு தீபாராதனையும் நடை பெற்று திருவாசகம் முற்றோதல் தொடங்கியது. இதில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதல் செய்தனர் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அன்னம் பாலிக்கப்பட்டது. கடந்தாண்டு இவர்கள் சார்பில் 112 இடங்களில் முற்றோதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments