Breaking News

நெய்வேலி என்எல்சியில் ஆபத்தை உணராமல் சுரங்கத்தில் இறங்கி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் வகையில், நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில், மண்வெட்டிய ராட்சத  இயந்திரத்தை, ஆபத்தை உணராமல், சுரங்கத்தில் இறங்கி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தின்  அருகில் வடக்கு வெள்ளூர்  கிராமம் அமைந்துள்ளது.

இக்கிராமத்தில்  சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,  இக்கிராம மக்கள் ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு, தங்களது,  வீடு மற்றும் நிலங்களை கொடுத்துவிட்டு,   வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் என்எல்சி நிர்வாகம் தற்போது வசிக்கின்ற இடங்களையும், கையகப்படுத்த முயற்சி செய்து வருவதால், நிலங்களை கையகப்படுத்த விடாமல்,  உரிய இழப்பீடும்,  நிரந்தர வேலையும் கேட்டு, அக்கிராம மக்கள் கடுமையாக  போராடி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு வெள்ளூர் கிராமத்தின் அருகாமையில் உள்ள முதலாவது சுரங்கத்தில், மிகப்பெரிய இயந்திரத்தின் மூலம்,  என்எல்சி நிர்வாகம், நேற்று மதியம் முதல் மண் வெட்டும் பணியை மேற்கொண்டது.

அப்போது புயல் போல் மண்புழுதிகள் உருவாகி, காற்றின் திசைக்கு ஏற்ப,  அருகிலுள்ள வடக்கு வெள்ளூர் கிராமம் முழுவதும்,  சூழ்ந்ததால், அக்கிராமத்தில் வசித்த,  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும், கடுமையான மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த,  அக்கிராம மக்கள் சுரங்கத்தின் அருகே சென்று, மண் வெட்டும் இயந்திரத்தை நிறுத்த கோரி கூச்சலிட்டு கத்தி உள்ளனர்.

ஆனால் அதற்கு செவி சாய்க்காத என்எல்சி நிறுவன அதிகாரிகள், தொடர்ச்சியாக மண்வெட்டிக்கொண்டே, இருந்ததால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், இரவு 7 மணி அளவில்,  நூற்றுக்கும் மேற்பட்டோர்,   மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவினரின், பாதுகாப்பை மீறியும்,  ஆபத்தை உணராமல், சுமார் 600 அடி ஆழம் கொண்ட முதலாவது சுரங்கத்தில் இறங்கி, மண் வெட்டும் இயந்திரத்தின் முன்பு,  நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,  தகவல் அறிந்த என்எல்சி அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து,  மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் உதவியுடன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் மண் வெட்டும் பணி-யை,  தற்காலிகமாக நிறுத்துவதாக என்எல்சி அதிகாரிகள் கூறியதால், சுரங்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.

 ஆபத்தான முறையில்,  எவ்வித பாதுகாப்பும், இல்லாத சுரங்கத்தில், நூற்றுக்கு மேற்பட்ட கிராம  மக்கள், திடீரென அபாயம் மிகுந்த சுரங்கத்தில் இறங்கி,  ராட்சச இயந்திரத்தை முற்றுகையிட்டதால்,  நெய்வேலி பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments