ஒழலூர் ஊராட்சியில் நடைப்பெற்ற சர்வதேச சிறுதானிய ஆண்டு பொங்கல் விழா
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழலூர் ஊராட்சியில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழா தினம் கொண்டாடப்பட்டது.
களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் குழு சார்பில் ஏற்பாடு,ஒழலூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைப்பெற்ற சிறுதானிய பொங்கல் விழாவில் சுற்றுச்சூழல் கால நிலைமாற்றத்தை தாங்கி வளரக்கூடிய சிறுதானிய பயிர்கள் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும்,சிறுதானிய உணவுகளின் பயன்பாடு மற்றும் சிறுதானிய உணவுகளால் உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்தும் கும்மியடித்து, நாட்டுப்புற பாடல்கள் பாடியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பாராம்பரிய சிறுதானிய பொங்கல்யிட்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் முதன்முறையாக ஒழலூர் ஊராட்சியில் கொண்டாப்பட்ட சர்வதேச சிறுதானிய ஆண்டு பொங்கல் விழாவில் கிராமத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு சிறுதானிய பொங்கல்யிட்டு மகிழ்ந்தனர்.



No comments
Thank you for your comments