Breaking News

விருத்தாசலத்தில் பரபரப்பு... குடும்பத்தோடு தீக்குளிக்க முயச்சி

விருத்தாசலத்தில்   தனியார் மகளிர் குழு நடத்திய, மேரி மல்லிகா என்பவர், குழுவுக்கு கொடுத்த பணத்தை மீட்டு தர கோரி கணவர் குழந்தைகளோடு தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கமுயன்றார்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இலங்கை அகதி முகாமில் வசித்து வருபவர் விஜித்குமார்இவரது மனைவி மேரி மல்லிகா 

அழைக்கின்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பதிவில்லாத மகளிர் குழு ஒன்று ஆரம்பித்து தன்னுடைய 24 பவுன் தாலியை அடகு வைத்து அதில் வந்த பணத்தில்அதே பகுதியை சேர்ந்த 13 பெண்களுக்கு 50,000 வீதம் கடன் கொடுத்துள்ளார் 

இதனை மாதம் 3750 வீதம் வட்டி அசலுடன் 25 மாதங்களுக்கு பணம் வசூல் செய்வது என கொடுத்த பணத்தை பணம் வாங்கிய 13 நபர்களும் மூன்று மாதங்கள் மட்டும் தவணைத் தொகையை கட்டியவர்கள் கடந்த ஆறு மாதமாக கடனை தவணைத் தொகையை கட்டாத காரணத்தால் அதனை திருப்பி கேட்ட போது  கணவன் மனைவியை  13 நபர்களும் சேர்ந்து அடித்து உதைத்தது குறித்தும் கொடுத்த பணத்தை அவர்களிடம் வாங்கி தர கோரியும் விருத்தாசலம் காவல் துறையில் புகார் மனு கொடுத்தும் மூன்று மாதமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் 

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி... 

செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்

இன்று சார் ஆட்சியர் அலுவலகம் முன்புமேரி மல்லிகா தன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார் இதனை பார்த்த காவல்துறையினர்உடனடியாக தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார் 

பின்பு அவரை விருத்தாசலம் கோட்ட காவல்உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்வதாக கூறியதுடன் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள் .  இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்புஏற்பட்டது.

No comments

Thank you for your comments