தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நினைவு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று (20.01.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். பின்பு பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இக்கண்காட்சியில், தமிழ்நாடு அரசின் அரும்பணிகளின் அணிவகுப்பு குறித்து "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா உள்ளிட்டவற்றை பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சியானது தொடர்ந்து 10 நாட்கள் (20.01.2023 முதல் 29.01.2023) வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அரசின் திட்டங்கள் சாதனைகள் மற்றும் பயனாளிகள் குறித்த 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் தெருவோரக் கடைகள் வடிவில் அமைக்கப்பட்டிருந்த பல்சுவை உணவுடன் கூடிய உணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் அரங்கில் இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டா மாற்றம், வருவாய்துறை சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை, சமூக நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
இன்று முதல் (20.01.2023) தொடர்ந்து, 10 நாட்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் நாள்தோறும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பார்த்துப் பயனடையும் வகையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments