ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும். மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறுயாரும் தேசியக்கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக எண் – 044-27237175 மற்றும் 7402606005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments