Breaking News

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பூத நிக்ரகப் பெருமாள்

காஞ்சிபுரம், ஜன.2 :

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் உள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள பூத நிக்ரகப் பெருமாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திங்கள்கிழமை நின்ற, அமர்ந்த, சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் மூலவருக்கு பின்புறத்தில் தெப்பக்குளம் அருகில் பூத நிக்ரகப் பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள பூத நிக்ரகப் பெருமாள் தரைதளத்தில் அமர்ந்த கோலத்திலும்,முதலாவது தளத்தில் நின்ற கோலத்திலும், 2 வது தளத்தில் கிடந்த கோலத்திலும் காட்சி தருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று தளங்களிலும் உள்ள பூதநிக்ரகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.திரளான பக்தர்களும் மூன்று தளங்களிலும் உள்ள பூத நிக்ரகப் பெருமாளை வரிசை,வரிசையாக சென்று தரிசித்தனர்.காமாட்சி அம்மனும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பூத நிக்ரகப் பெருமாள் (1)அமர்ந்த கோலம்  (2)சயனக்கோலம் (3)நின்ற கோலம்

No comments

Thank you for your comments