24 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர்...
காஞ்சிபுரம், ஜன.2 :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா 24 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருரத்ரய்யா தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு உதவி ஆட்சியர்(பயிற்சி) அர்பித் ஜெயின், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) புண்ணிய கோட்டி, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 281 மனுக்கள் வரப்பெற்று அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தீர்வு காண பரிந்துரை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தாலுகாவைச் சேர்ந்த ராவத்தநல்லூர், காரணை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 24 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா வழங்கினார். விதவைகளுக்கான உதவித் தொகை இருவருக்கும் வழங்கப்பட்டது.

No comments
Thank you for your comments